ராமேஸ்வரம் நகர் திமுக செயலாளருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு.. இராமநாதபுரம், செப்.18- திமுக பவள விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதி நாள் ( பெரியார் பிறந்த நாள்) என முப்பெரும் விழா வேலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவில் ராமேஸ்வரம் நகர் செயலாளரும், நகராட்சி தலைவருமான கே.இ.நாசர் கானை பாராட்டி ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினா ர். பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான க. துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
ராமேஸ்வரம் நகர் திமுக செயலாளருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு..
எழுதியவர்: ஆசிரியர் September 18, 2023, 2:26 pm




You must be logged in to post a comment.