17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குப்பனம்பட்டியில் கிணறு தோண்டும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… போலீசார் விசாரணை..

உசிலம்பட்டி அருகே குப்பனம்பட்டியில் கிணறு தோண்டும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… போலீசார் விசாரணை..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2023, 1:27 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார.; இவருக்கு சொந்தமான கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக அய்யனார்குளத்தில் இருந்து 6க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் மின் மோட்டார் பொறுத்தும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அய்யனார்குளத்தை சேர்ந்த ராசு தேவர் மகன் மகாலிங்கம்; சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!