18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை..

கீழக்கரையில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2023, 4:29 pm

இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் கடற்கரை பள்ளி ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி சிறப்பு தொழுகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 07:45 மணியளவில் கடற்கரை பள்ளி ஈத்கா திடலில் நடைபெற்றது.

இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தொழுகையை முன் நின்று நடத்தினார். ஏற்பாடுகளை கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன், சங்கத்தின் நிர்வாகிகள் சுல்பிகார் அலி, ஸஃப்வான், சுஹைல், அசிம், ஸைபுல்லாஹ் ஆகியோர் செய்திருந்தனர். அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!