திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்ன கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 40 க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 520 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிவப்பிரகாசம் வரவேற்பு உரையாற்றினர் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மானந்தன், பழையனூர் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பறையம்பட்டு தலைமை ஆசிரியர் ராம் ஆகியோர் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர்களாக கமலா பீடம் நிறுவனர் சீனிவாசன் தாகா டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் குணால் மற்றும் நடுவர் பணியில் முகமது நபி, பாபு, சரவணன், கோவிந்தன், வில்லியம், கிருஷ்ணமூர்த்தி, தண்டாயுதபாணி, முத்துகிருஷ்ணன், பெரியசாமி, ராமமூர்த்தி, செல்வகுமார் மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் திவாகரன் நன்றியுரை வழங்கினார்.
வட்டார அளவிலான கபடி போட்டி – மாணவ மாணவிகள் ஆர்வம்..
எழுதியவர்: ஆசிரியர் September 16, 2023, 8:54 pm




You must be logged in to post a comment.