18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு..

தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2023, 9:27 am

தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஆடு ஒன்றினை விழுங்கி நகர முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து தகவல் கிடைத்த தென்காசி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் கணேசன், ஜெயரத்தினகுமார், சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து ஜெயபிரகாஷ் பாபு, வீரர்கள் விஸ்வநாதன், வெள்ள பாண்டியன், முகமது அனிபா ஆகியோர் சென்று மலைப்பாம்பினை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உயிருடன் மலை பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!