17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பாலிடெக்னிக் மாணவி: தேசிய யோகா போட்டிக்கு தகுதி..

கீழக்கரை பாலிடெக்னிக் மாணவி: தேசிய யோகா போட்டிக்கு தகுதி..

எழுதியவர்: ஆசிரியர் September 14, 2023, 10:31 pm

இராமநாதபுரம், செப்.14 – தென்காசி எஸ்ஆர்எம் கலை கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை 2 ஆம் ஆண்டு மாணவி எம். லவீனஸ்ரீ பங்கேற்றார். இப்போட்டியில் வென்ற இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவி லவீனஸ்ரீக்கு கல்லூரி சேர்மன், இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் ஏ.ஷேக் தாவூது பரிசு வழங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் கணேஷ்குமார், மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.பி.நாகராஜன், முதலாம் ஆண்டு துறை தலைவர் உமையாள், உடற்கல்வி இயக்குனர் மருதசலாமூர்த்தி ஆகியோர் உடன் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!