17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை..

சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் September 13, 2023, 9:22 pm

தென்காசி மாவட்டம் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி மற்றும் துணைத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவி முத்து மாரி, துணைத் தலைவர் பட்டுராஜ் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!