17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் தமுமுக-மமக சிறப்பு ஆலோசனை கூட்டம்..

கடையநல்லூரில் தமுமுக-மமக சிறப்பு ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 12, 2023, 10:26 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமுமுக-மமகவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது பஸ்ஸில் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், நகர பொருளாளர் முகம்மது அலி முன்னிலை வகித்தார். இதில் தமுமுக மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழி அணி மாநில துணை செயலாளர் முகம்மது ரபீக், மமக மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட பொருளாளர் சேகனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முக்கிய ஆலோசனை வழங்கினர். நகர துணை செயலாளர் சம்சுதீன், லத்தீப், ராஜப்பா, நகர மருத்துவ சேவை அணி பாதுஷா மற்றும் வார்டு நிர்வாகி முஜீப், முன்னாள் தமுமுக நகர செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் தமுமுக துணை செயலாளர் சித்திக் மற்றும் நயினா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடையநல்லூரில் தமுமுக மமக வின் மக்கள் நலபணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!