17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடன் தொல்லை பெண் தற்கொலை..

கடன் தொல்லை பெண் தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் September 12, 2023, 10:11 pm

இராமநாதபுரம், செப்.12- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவைச் சேர்ந்தவர் செய்யது ரிபாயா, 37. இவருக்கும், சகுபர் சாதிக் அலி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து செய்யது ரிபாயா 2 பிள்ளைகளையும் கடன்பட்டு வளர்த்தார். கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் மன உளைச்சல் அடைந்த செய்யது ரிபாயா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்து வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!