17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே, மணியஞ்ஜி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கு..

அலங்காநல்லூர் அருகே, மணியஞ்ஜி அரசு பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கு..

எழுதியவர்: ஆசிரியர் September 11, 2023, 8:56 pm

அலங்காநல்லூர், செப்.11.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மணியஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடன்ஸி சார்பில், மாணவிகளுக்கான சிறப்பு தனித்திறன் கருத்தரங்கு பயிற்சி நடைபெற்றது.

இதில், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் மதுரை பாண்டி, செயலாளர் பன்னீர் செல்வம், நிர்வாக செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், முன்னாள் செயலாளர் பொன்குமார், விஜயலட்சுமி ஆகியோர்  மாணவிகள் முன்னிலையில் கருத்தரங்கு உரையாற்றினர். ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!