18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 100 நாள் வேலையை நகர்புறத்திலும் விரிவுபடுத்தக் கோரி உசிலம்பட்டியில் பெண்கள் மனு அளிக்கும் போராட்டம்..

100 நாள் வேலையை நகர்புறத்திலும் விரிவுபடுத்தக் கோரி உசிலம்பட்டியில் பெண்கள் மனு அளிக்கும் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 11, 2023, 8:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அனைத்து இந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை நகர்ப்புறத்திலும் உள்ள நலிவுற்ற பெண்களுக்கு வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால் கிராமப்புறங்களைப் போல் நகர்புறத்திலும் 100நாள் வேலையை அனுமதிக்க வேண்டுமென தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி நகராட்சி அதிகாரிகளிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.பெண்கள் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!