17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம் தொடர்பான சந்திப்பு..

இலஞ்சி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம் தொடர்பான சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2023, 7:41 pm

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம் தொடர்பான சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் செப்.12 அன்று நடைபெற உள்ள தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிடும் போராட்டத்தில் பங்கேற்பது சம்பந்தமாக தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களிடம் விளக்கி கூறப்பட்டது. தூய்மை பணியாளர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து ஏஐசிசிடியு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் தூய்மைப் பணி தொழிலாளர் சங்கத்தின் கெளரவ தலைவர் பேச்சிமுத்து, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமாக பேசினார்கள். இப்போராட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!