18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உதயநிதி பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்திய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்; நன்றி தெரிவித்த நிர்வாகிகள்..

உதயநிதி பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்திய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்; நன்றி தெரிவித்த நிர்வாகிகள்..

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2023, 9:32 am

தமிழக அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கூட்டத்தை சிறப்பாக நடத்திய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு இளைஞரணி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்திய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனை மாவட்ட இளைஞரணியினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ. (வடக்கு) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்திட இளைஞரணியினரை ஒருங்கிணைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலனை இளைஞரணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா தலைமையில், துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், முகம்மது அப்துல் ரகீம், கிருஷ்ணராஜ், ஐவேந்திரன், சிவகுமார் ஆகியோர் மாவட்ட பொறுப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!