18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் நகராட்சியில் இலவச கண் ஆலோசனை முகாம்..

கடையநல்லூர் நகராட்சியில் இலவச கண் ஆலோசனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் September 7, 2023, 11:38 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இலவச கண் ஆலோசனை முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்கள் பலர் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் ஆலோசனை முகாமினை கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் துவக்கி வைத்தார். முகாம் காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் பொது மக்கள் பலர் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையினை பெற்று பயனடைந்தனர். இந்த ஆலோசனை முகாமில் சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர், சுகாதார அலுவலர் சிவா மற்றும் அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் திமுக நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் ஜாஹிர் உசேன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!