17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்…காசநோயாளிகளுக்கான நடமாடும் இலவச எக்ஸ்ரோ வண்டி…

உசிலம்பட்டியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்…காசநோயாளிகளுக்கான நடமாடும் இலவச எக்ஸ்ரோ வண்டி…

எழுதியவர்: ஆசிரியர் September 7, 2023, 10:28 pm

உசிலம்பட்டியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் நiடைபெற்றது. இதில் காசநோயாளிகளுக்கான நடமாடும் இலவச எக்ஸ்ரோ வண்டியை எம்எல்ஏ அய்யப்பன் துவங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் காசநோய் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் காசநோய்த்து துறையின் சார்பாக நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனத்தை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த வாகனம் கிராமம் கிராமாகச் சென்று காசநோயாளிகளைக் கண்டறிந்து கிராமத்திலேயே வாகனத்தில் எக்ஸ்ரோ இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு காசநோய் தாக்கம் இருப்பின் நோயானிகள் உசிலம்பட்டி அரசு காசநோய் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் இந்த மருத்துவமுகாமில் கர்ப்பிணி பெண்கள் புற நோயாளிகள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் எக்ஸ்ரே ஆகியவை எடுக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!