17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியபட்டினம் கடல் அட்டை தொழிலாளிக்கு2 வாரம் சிறை..

பெரியபட்டினம் கடல் அட்டை தொழிலாளிக்கு2 வாரம் சிறை..

எழுதியவர்: ஆசிரியர் September 5, 2023, 6:41 pm

இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் வன கோட்ட உயிரினக்காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர் உத்தரவுப்படி கீழக்கரை வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் கடல் அட்டை வரத்து தொடர்பாக நேற்று ரோந்து சென்றனர். அப்போது களிமண்குண்டு- பெரியபட்டணம் அம்மன் கோயில் சாலையில் சென்ற பெரியபட்டினம் மீராஷா மகன் அஜிம் கான் என்பவரை  பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 கிலோ கடல் அட்டை ( உயிருடன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ விசாரணையில் பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த  ஒருவருடன் சேர்ந்து கடல் அட்டை தொழில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் ஜே.எம் நெ.1 முன் அஜிம் கானை ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி செப். 19 வரை, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!