தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் சங்கர சுப்பிரமணியன் திட்ட அறிக்கை வாசித்தார். இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் மற்றும் ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜருக்கு வெண்கல சிலை அமைத்து அதற்கு போதுமான இடத்தை தேர்வு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் நன்றியை தெரிவித்து கொண்டார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்..
எழுதியவர்: ஆசிரியர் September 5, 2023, 12:22 pm




You must be logged in to post a comment.