17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது; கல்வியாளர்கள் வாழ்த்து..

கடையநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது; கல்வியாளர்கள் வாழ்த்து..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2023, 3:48 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஸ்ரீஉலகா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறும், நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நூற்றாண்டை நெருங்கி வரும் அரசு உதவி பெறும் ஸ்ரீ உலகா மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான சண்முகசுந்தரம் என்ற லயன்ஸ் உலகா சுந்தர் நல்லாசிரியர் விருது பெற உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆசிரிய ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகம், அரிமா சங்கத்தினர் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!