மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் உள்ள அம்மு முத்தன் பட்டியைச் சேர்ந்தவர் சிவரஞ்சன்(32).விவசாயியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் இன்று காலை வழக்கம் போல் தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியுள்ளார்.அப்பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவமறிந்த எழுமலை போலிசார் சம்பவ இடத்திற்குச்சென்று சிவரஞ்சன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் பெய்த மழையில் மோட்டார் சுவிட்ச் இருந்த சுவற்றில் ஈரப்பதம் அடித்து மின்சாரம் கசிந்துள்ளதும் அதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
எழுதியவர்: ஆசிரியர் September 2, 2023, 11:39 am




You must be logged in to post a comment.