தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கையை வலியுறுத்தினர். புளியங்குடி பகுதியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுகின்ற வார்டு வாரியான மையங்களை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கைக் குழந்தைகளோடு அலைக்கழிக்கப்பட்டு மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகளிடம் முறையிட்டனர். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், நகர தலைவர் அஹமது தலைமையில் புளியங்குடி காயிதே மில்லத் நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து மேற்கூறிய பிரச்சினை சரிசெய்திட வலியுறுத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார நிலைய அதிகாரி உறுதியளித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்புளியங்குடி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரியை சந்தித்து எஸ்டிபிஐ கோரிக்கை..
எழுதியவர்: ஆசிரியர் September 1, 2023, 8:55 am




You must be logged in to post a comment.