17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் குறு வட்ட விளையாட்டு போட்டி: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி பரிசுகளை அள்ளியது…

மண்டபம் குறு வட்ட விளையாட்டு போட்டி: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி பரிசுகளை அள்ளியது…

எழுதியவர்: ஆசிரியர் August 31, 2023, 7:15 pm

இராமநாதபுரம், ஆக.31 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் குறு வட்ட விளையாட்டு போட்டிகள் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தன.

மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் துவக்கி வைத்தார்.  17 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவு ஹேண்ட் பால் ஆட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி முதலிடம், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி   இரண்டாம் இடம் பிடித்தன. 19 வயதிற்குபட்ட பிரிவில் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல் இடம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம்  பிடித்தன. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த 19 வயதிற்குட்பட்ட ஆடவர் எறி பந்து போட்டியில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன. 17 வயது ஆடவர் ஒற்றையர் டென்னி காய்ட் ஆட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்தது. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் சசிகுமார் எற்பாடு செய்தார்.  உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், ரமேஷ், கிறிஸ்டோபர், லட்சுமணன், ஆனந்த், ஜெயசூர்யா, உடற்கல்வி ஆசிரியை கள் கோபி லட்சுமி, லூர்து மேரி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!