17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி; பரிசுகள் வழங்கல்..

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி; பரிசுகள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் August 31, 2023, 3:40 pm

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கலைஞர் கருணாநிதி பற்றிய வினாடி வினா போட்டி பாளையங்கோட்டை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை மாது புஷ்பம் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி கலைஞரின் இளமைக்காலம் மற்றும் அவரது அரசியல் வரலாறு பற்றி மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அந்த உரையிலிருந்து மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கவிஞர் சுப்பையா நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பாளையங்கோட்டை மாநகராட்சி நடுநிலை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளியம்மாள், சாந்தி, மகேஸ்வரி மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!