17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காவிரி குடிநீர் விநியோக விவகாரம்.. இராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதம்..

காவிரி குடிநீர் விநியோக விவகாரம்.. இராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதம்..

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2023, 11:29 pm

ராமநாதபுரம் ஆக 30-ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் இன்று நடந்தது தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் நகர் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளால் பேருந்து வளாகத்தில் இருந்த 50 கடைகளின் மாதாந்திர வாடகை தொகையை ரூ.3.83 லட்சதத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாஜக, மமக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சி தலைவர் கார்மேகம் அறிவுரையை ஏற்று கவுன்சிலர்கள் அமைதி காத்ததால் கூட்டம் மீண்டும் தொடங்கியது. கவுன்சிலர்கள் அய்யனார், ராமநாதன்,  குமார், மணிகண்டன், ராஜாராம் பாண்டியன், காளிதாஸ், காதர் பிச்சை, இந்துமதி, ஜஹாங்கீர், வீரசேகர் உள்ளிட்டோர் விவாதங்களில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!