17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருநகரில் ,வீட்டில்  டீ தயாரித்த போது சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.. .

மதுரை திருநகரில் ,வீட்டில்  டீ தயாரித்த போது சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி.. .

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2023, 8:46 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்தவர் கலாவதி(வயது 74 .) இவர், வீட்டில்  டீ போட்டுக் கொண்டிருந்தார் அப்போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகி உயிருக்கு போராடினார்.  அருகில் இருந்தவர்கள் அவர்கள் முதலுதவி செய்து  சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலாவதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, மகன் கோபிநாத் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மூதாட்டி கலாவதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!