17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில்,ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் ஹோட்டல் வாட்ச்மேன் ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி-ரயில்வே காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை..

திருப்பரங்குன்றத்தில்,ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் ஹோட்டல் வாட்ச்மேன் ரயில் மோதி சம்பவ இடத்தில் பலி-ரயில்வே காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை..

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2023, 8:26 am

மதுரை பைக்கரா பகுதியில் வசிப்பவர் மாய தேவர் மகன் மணிமாறன் (52) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மணிமாறனுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. திருப்பரங்குன்றம் திலிருந்து திருநகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மணிமாறன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வாட்ச்மேன் பணியில் இருந்து உள்ளார்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் பைக்கராவில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில்  ஏறி திருப்பரங்குன்றத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து தனது ஹோட்டலுக்கு பணிக்கு  செல்ல முயன்ற போது  ரயில் மோதி மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த மதுரை ரயில்வே சரக காவல்துறையினர்  மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் மணிமாறனின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்குச் செல்ல தண்டவாளத்தை கடந்த வாட்ச்மேன் உயிரிழந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!