இராமநாதபுரம், ஆக.29 – மேஜர் தயான் சந்த் பிறந்த நாள் ஆக.29 நாள் இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு விளையாட்டு வீரர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டம், சதுரங்கம், கேரம், நடை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது, தேசிய ஹாக்கி விளையாட்டு வீரரும், சுங்க இலாகா ஆய்வாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர் சரவணக்குமார், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ஏற்பாடு செய்தார்.
இந்திய விளையாட்டு தினம்: ராமநாதபுரத்தில் கொண்டாட்டம் …
எழுதியவர்: ஆசிரியர் August 29, 2023, 12:57 pm




You must be logged in to post a comment.