17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் “கலைஞரின் பன்முக திறமை” எனும் தலைப்பில் கட்டுரை போட்டி..

நெல்லையில் “கலைஞரின் பன்முக திறமை” எனும் தலைப்பில் கட்டுரை போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2023, 12:51 pm

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் “கலைஞரின் பன்முக திறமை” என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. கலைஞர் நூற்றாண்டு நிகழ்வினை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பாக 100 நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கலைஞரின் பன்முக திறமை என்கிற தலைப்பில் மாணவ மாணவிகள் கட்டுரை எழுதினார்கள். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார்.

போட்டியில் தட்சிணமாற சங்க கல்லூரி, தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, ம.தி.தா கல்லூரி, போப் கல்லூரி என பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!