இராமநாதபுரம், ஆக.28-ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரம் கொக்காடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் கொக்காடி கிராமத்தில் புதிய கடை போடுவதற்கான அனுமதி கோரி அவத்தாண்டை ஊராட்சி செயலாளர் ஐயம்பெருமாளை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் புதிய ரசீது தருவதாக அய்யம்பெருமாள் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியசாமி ,இது குறித்து ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அய்யம்பெருமாளிடம் முனியசாமி இன்று மாலை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட லஞ்சம் ஒழிப்பு போலீசார் அய்யம்பெருமாளை (44) கையும், களவுமான பிடித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை அய்யம்பெருமாளிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
புதிய ரசீது போட ரூ.3 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 7:56 pm




You must be logged in to post a comment.