17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் வாசிப்புத் திறன் மன்றம் தொடக்க விழா..

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் வாசிப்புத் திறன் மன்றம் தொடக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 7:37 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு திறன் மன்றம் தொடக்க விழா பொறுப்பு தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தார் முன்னதாக வாசிப்புத் திறன் மன்ற பொறுப்பாசிரியர் அரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.

மேலும் புத்தகங்களை வாசிப்போம் மனிதர்களை நேசிப்போம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் ஆசிரியர்கள் நாராயணன், மகேஸ்வரி, உள்ளீட்ட ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!