18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்..

மதுரை ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 6:41 pm

மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த ரயில் பெட்டியானது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 9 பேர் உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்தனர் இந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக  ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தீ விபத்து நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் நிற்கும் இன்றும் இரு நாட்களாக  சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து IRCTC நிறுவன உதவியாளரான  உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த தீபக் (23), சமையல் உதவியாளரான பிரகாஷ் ரஷ்தோகி (47) , உதவியாளரான சுபம் கஷ்யப்(19), பேசின் சுற்றுலா நிறுவனத்தில் வழிகாட்டி நரேந்திரகுமார் (61), சமையலர் ஹர்திக் சஹெனே ஆகிய 5 பேரும் மதுரை மாவட்ட 6ஆவது  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

செய்தியாளர்  வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!