17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்..

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 6:04 pm

ராமநாதபுரம், ஆக.28 – ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கிழக்கு தாலுகா சிறைகுளம் ஊராட்சி கிறிஸ்து நகர். பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த 16 ஆண்டு காலமாக காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீரின்றி மிகவும் அவதிக்குள்ளாகிள்ளர். ஒரு குடம் தண்ணீர் ரூ.12 கொடுத்து வாங்கி அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சாலை வசதி, மின் வசதி கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் குடிநீர், மின்சாரம் சாலை வசதி ஆகியவற்றை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் சிறைகுளம் கிறிஸ்து நகர் பெண்கள் மனு அளித்தனர். கடலாடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினர் பச்சமால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!