17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் பீடித்தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு-பேரணி..

தென்காசியில் பீடித்தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு-பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 1:50 pm

தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் 11-வது மாநில மாநாடு தென்காசி மாவட்டத்தில் சக்தி நகரிலிருந்து பேரணியுடன் துவங்கியது. மாநில தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் பேரணிக்கு தலைமை தாங்கினார். பேரணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிஐடியூ மாநில தலைவருமான அ.சவுந்திரராஜன், சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் கே. திருச் செல்வன், பொருளாளர் எஸ்.பாப்பூ, சிஐடியூ மாநில துணைத் தலைவர்கள் எம். மகாலட்சுமி ஆர்.எஸ் செண்பகம், வரவேற்பு குழு தலைவர் மேனாள் பேராசிரியர் சங்கரி, சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரிய முல்லை, சிஐடியு மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி தென்காசி சக்தி நகர் பகுதியில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இன்று (28.08.23) குற்றாலத்தில் வைத்து பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!