18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம், சீனியப்பா தர்ஹா தமுமுக கிளை ஆலோசனை கூட்டம்..

மண்டபம், சீனியப்பா தர்ஹா தமுமுக கிளை ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2023, 8:59 am

இராமநாதபுரம், ஆக.28 – இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக மண்டபம் பேரூர் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலீமுல்லாஹ்கான் அவர்களும், இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ உரை ஆற்றினார். மண்டபம் பேரூர் தமுமுக சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை நடத்துதல், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக ஆலோசனை கூட்டம் மண்டபம் ஒன்றிய சீனியப்பா தர்ஹா கிளை சார்பில் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலாளர்எஸ்.சலீமுல்லா கான் தலைமை வகித்தார். தமுமுக 29ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர் பகுதிகளில் தமுமுக கொடி கொடியேற்றி நலத்திட்ட உதவி, மருத்துவ உதவிகள் வழங்குதல், வாலாந்தரவையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்குதல்,  விலைவாசி உயர்வு, மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் கலவரத்தை தூண்டும் மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!