18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலமேடு அருந்ததியர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா..

பாலமேடு அருந்ததியர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 27, 2023, 10:29 pm
அலங்காநல்லூர், ஆக.27-

மதுரை மாவட்டம் பாலமேடு அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!