17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கிய தமுமுகவினர்..

நெல்லையில் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கிய தமுமுகவினர்..

எழுதியவர்: ஆசிரியர் August 27, 2023, 5:29 pm

நெல்லையில் தமுமுக சார்பில் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தமுமுக அமைப்பின் 29-வது தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் தமுமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம், இரத்ததான முகாம் உள்ளிட்ட சேவைகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி தமுமுக சார்பில் பெருமாள்புரம் ஜெயம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு (சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மேலப்பாளையம் பகுதி தலைவர் யூசுப் சுல்தான் தலைமை வகித்தார். செயலாளர் பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் MC மதிய உணவை வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மமக இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாஸ்,‌ மாவட்ட துணைச் செயலாளர் அ. காஜா, இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் காசிம் பிர்தெளஸி, மண்டல செயலாளர் நாமியா அசன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் குதா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் மதார், மனிதநேய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் நாகூர் மீரான் மற்றும் பகுதி, வார்டு நிர்வாகிகள் பிஸ்கட் சுல்தான், இஸ்மாயில், தமீம் அன்சாரி, சிராஜ், ராகத் செய்யது அலி, ஷாஜகான், ரிபாய்,‌ நெயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!