17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமுமுக தொடக்க நாள் விழா: உதவித் தொகை வழங்கல்..

தமுமுக தொடக்க நாள் விழா: உதவித் தொகை வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் August 27, 2023, 11:45 am

இராமநாதபுரம், ஆக.27- ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில்  தமுமுக வின் 29ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்  பரமக்குடியில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமை வகித்தார்.

இஸ்லாமிய பிரசார பேரவை மாநிலச் செயலார் அப்துல் காதர் மன்பஈ உரை பேசினார். மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக் மதார், மாவட்ட பொருளாளர். அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அபிராமம் பாத்திமா என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ.13 ஆயிரத்து 500 மாவட்ட பொருளாளர் அபுதாஹீரிடம் வழங்கப்பட்டது மாவட்ட நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முஹமது சஜீத் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!