மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பங்களா மேட்டுத் தெருவில் வசித்து வரும் போதுராஜன்.இவர் நெல் கமிஷன் மற்றும் செல்போன் கடை நடத்தி வருகின்றார்.இவருடைய மனைவி சீதாலட்சுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகின்றார்.இவர்களுக்கு 14 வயதில் தனிஷ்கா என்ற மகளும் 11வயதில் தர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.கணவன் மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனிஷ்கா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்பொழுது வீட்டில் யாருமில்லாத போது சிறுமியிடம் இரண்டு பெண்கள் ஜோசியம் பார்ப்பவர்கள் போல் பாவனை செய்து குடிக்க தண்ணீர் கேட்டு சிறுமியின் கவனத்தை திசை திருப்பி மயக்கி வீட்டின் பீரோவில் இருந்த ரூ8 லட்சம் பணம் 10 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்கள்.வீட்டிற்கு வந்த போதுராஜன் பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு சோதனை பணம் நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து போதுராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டியில் ஜோசியம் பார்ப்பது போல் சிறுமியை மயக்கி பணம் நகையை கொள்ளையடித்த பெண்களை போலிசார் தேடல்..
எழுதியவர்: ஆசிரியர் August 27, 2023, 11:42 am




You must be logged in to post a comment.