17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் சிறைவாசி நால்வர் விடுதலை..

இராமநாதபுரத்தில் சிறைவாசி நால்வர் விடுதலை..

எழுதியவர்: ஆசிரியர் August 26, 2023, 8:02 pm

இராமநாதபுரம், ஆக. 26- தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) பி.சி.கோபி நாத் அறிவுறுத்தல் படி, ராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலையில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. 

இதில் 14 ஆண்டு கால பட்டியல் குற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 4 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். நீதித்துறை நடுவர் நெ.2 ஜி.பிரபாகரன் நடுவராக பணியாற்றினார். ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சி.கதிரவன்  மக்கள் நீதிமன்ற ஏற்பாடு செய்தார். சிறைச்சாலை கண்காணிப்பாளர் தவமணி, சட்ட உதவி வழக்கறிஞர்கள் ஜி.கேசவன், ஜி.விஜய் ஆனந்த், டி.பாலகுமார் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!