இராமநாதபுரம், ஆக.25- உயர் நீதிமன்ற உத்தரவு படி கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியர் மனோஜ் முனியனை சஸ்பெண்ட் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கு, அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்யும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அத்துமீறல்களை கண்டித்து தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் செல்லப்பா தலைமை வகித்தார். இணை செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார். வட்டக் கிளை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர். கீழக்கரை தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார் தலைமை வகித்தார். கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி தாசில்தார் சஸ்பெண்ட்: வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 11:14 pm




You must be logged in to post a comment.