17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகரில் புதிய சாலை பொதுமக்கள் எதிர்ப்பு..

கீழக்கரை நகரில் புதிய சாலை பொதுமக்கள் எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 11:11 pm

இராமநாதபுரம், ஆக.25- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 16 வார்டு சின்னக்கடை தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

சின்னக்கடை தெரு சாலை தற்போது உயரமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்கடையுடன் மழை கலந்து வீடுகளின் உட்புறம், குறுகிய சந்து பகுதிகளில் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதி குழந்தைகள், முதியோருக்கு நோய் தொற்று ஏற்படுத்துகிறது. புதிய சாலை அமைக்க, தற்போதைய சாலையை பெயர்த்து விட்டு அதன்பிறகு சாலை அமைக்க வேண்டும். சாக்கடை குழிகள் இருக்கும் பகுதிகளில் இணைப்பு வேலை செய்ய வேண்டும். வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் இருப்பதால் புதிய சாலை பணியை முறையாக செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயரமான உள்ள பழைய புதிய சாலையை பெயர்த்தெடுக்காமல் அதன் மேல் புதிய சாலை பணி மேற்கொள்வதால் மட்டம் மேலும் உயர்ந்து சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு சின்னக்கடை தெரு மக்கள் சார்பில் கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜூடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!