18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி பகுதியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்; நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..

புளியங்குடி பகுதியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்; நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 4:26 pm

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட தைக்கா நடுநிலைப் பள்ளியில் நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்திர பாண்டியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வாக தமிழக முதல்வர் இத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி தொடக்க பள்ளிகளில் முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்திர பாண்டியன் நகராட்சி தைக்கா நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி தயார் செய்யப்பட்டு கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் கணேசன், மேலாளர் செந்தில் முருகன் மற்றும் புளியங்குடி திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!