17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிக்கு தகுதி..

தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டு போட்டிக்கு தகுதி..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 12:41 pm

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பறையம்பட்டு உயர்நிலைப் பள்ளியை மையமாகக் கொண்டு விளையாட்டுப் போட்டிகள் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14,17, மற்றும் 19 வயது அடிப்படையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள பல்வேறு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும், 14 வயது உட்பட்ட மாணவிகளுக்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும், 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில் முதலிடமும் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டியில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடமும் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றைய இறகுப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பேபிகிளாரா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஏழுமலை, சாந்தி, கலைச்செல்வி, முகமது ஜுனைத், சத்தியசீலன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்கள் பாராட்டினார்கள் மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!