17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் வெறிநாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகராட்சியை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம்..

கடையநல்லூரில் வெறிநாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகராட்சியை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 11:10 am

கடையநல்லூர் பகுதியில் வெறிநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சியை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வெறிநாய்கள் கடித்து பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் மலம்பாட்டை சாலை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் வெறிநாய்களினால் கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ரஹ்மானியாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் இத்ரீஸ் மற்றும் அக்ஸா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 5 வயது சிறுவன் அஹமது ஆகியோரை வெறிநாய்கள் கொடூரமாக தாக்கியத்தில் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெறிநாய்களை கட்டுப்படுத்திட வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான யாசர்கான் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடையநல்லூர் நகராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனா, சேனா. சர்தார், வேளாண் அணி மாவட்ட செயலாளர் காசிம், எஸ்டிடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் கரீம், மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம், நகர தலைவர் ஷாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!