18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகமது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

முகமது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் August 24, 2023, 10:23 pm

முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 19 8 2023 அன்று முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 1993 முதல் 2023 வரை படித்த மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கல்லூரியின் சேர்மன் எஸ் எம் முகமது யூசுப், செயலாளர் எஸ்எம்எச் ஷர்மிளா, எக்ஸிக்யூட்டி டைரக்டர் டாக்டர் ஹாமித் இப்ராஹிம், மற்றும் டைரக்டர் எஸ் எம் ஏ ஜெ ஹபீப் முகமது  தலைமையில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர் செந்தில்குமார் மற்றும் கட்டிடக்கலை துறை தலைவர் ஸ்டாண்லி கிளமண்ட் டேனியல் முன்னாள் மாணவர்களை வரவேற்று அன்பளிப்புகளை வழங்கினர். கட்டிடக்கலைத்துறை முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் அவர்களை வரவேற்று நன்றி உரையாற்றினார். 25 ஆண்டுகளுக்கு முன் படித்த முதல் மாணவர்கள் கலந்து கொண்டு இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தங்கள் அனுபவத்தின் மூலம் அறிவுரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற ஒரு சங்கத்தை உருவாக்கினர். இந்த சங்கம் முறையாக தலைவர் காதர் மீரா, துணைத் தலைவர் கபீர், செயலாளர் சிக்கந்தர் ஜமான், துணைச் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் வசீம் அக்கரம், என்ற பதவிகளை முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுத்தனர். இந்த சங்கத்தின் மூலம் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் கல்லூரிக்கும் எல்லா உதவிகளும் செய்து கொடுக்கும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!