18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை அரசு நூலகத்தில் “தூறல் தெறித்த சுவடுகள்” நூல் திறனாய்வுப் போட்டி; பரிசுகள் வழங்கல்..

செங்கோட்டை அரசு நூலகத்தில் “தூறல் தெறித்த சுவடுகள்” நூல் திறனாய்வுப் போட்டி; பரிசுகள் வழங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் August 23, 2023, 4:41 pm

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் கவிஞர் ஜெயபாலன் எழுதிய “தூறல் தெறித்த சுவடுகள்” நூல் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. திறனாய்வு போட்டியின் நடுவராக சுஜா கண்ணம்மா பொறுப்பேற்று கட்டுரைகளை ஆய்வு செய்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். பொருளாளர் தண்டமிழ்தாசன் பா. சுதாகர் விழுதுகள் சேகர் அக்ரி ஷேக்முகைதின் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி டவுண் மற்றும் மத்திய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஜெயபாலன், துணைத்தலைவர் கணபதி சுப்பிரமணியம், துணைத்தலைவர் பாப்பாக்குடி செல்வமணி, பொருளாளர் சக்தி வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஜெயபாலன் பரிசுகள் வழங்கினார். நிறைவாக நன்னூலகர் இராமசாமி நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!