17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பயிற்சி..

பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் பயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2023, 9:35 pm

தொற்று நோய்கள் சாப்பிடும் போது கைகள் மூலமாக தான் பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம பகுதிகளில் நடத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டது..  மேல் பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செவிலியர் கீர்த்திகா பள்ளி மாணவர்களுக்கு சாப்பிடும் முன், கழிப்பறைகளுக்கு சென்று வரும் போதும் எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என விளக்கப்பட்டது. கை கழுவும் முறை, நன்மைகள் குறித்து விரிவாக கூறப்பட்டது. நுாற்றுக்கணக்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கீதா, நாராயணன், அரசு, மகேஸ்வரி, உட்பட மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!