இராமநாதபுரம், ஆக.22- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் வருங்கால வைப்பு நிதி 95 பஞ்சாலை ஓய்வூதியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். சிவசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் எம். சிவாஜி துவக்கி வைத்து பேசினார். பஞ்சபடியுடன் குறைந்தபட்ச பென்சன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், இபிஎஸ் 95 பென்சன் தாரர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைவருக்கும் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் டி ராமச்சந்திர பாபு பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர் எஸ் வெங்கடசுப்பரமணியன் நிறைவுரை ஆற்றினார்.
வருங்கால வைப்பு நிதி பஞ்சாலை ஓய்வூதியர் உண்ணாவிரத போராட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் August 22, 2023, 6:23 pm




You must be logged in to post a comment.