17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்சோ வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்த  நீதிமன்றம்…

போக்சோ வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்த  நீதிமன்றம்…

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2023, 11:33 am

திண்டுக்கல் அருகே, வடமதுரையில் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி 2 பேருக்கு சிறை தண்டனை  திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக/ராஜேஷ்குமார்(32), மனைவி கிருத்திகா(22) ஆகிய 2 பேரை வடமதுரை போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் டிஎஸ்பி.துர்காதேவி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் , ராஜேஷ் குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!