17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி, ஏர்வாடி துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி: நாளை மின் தடை..

கடலாடி, ஏர்வாடி துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி: நாளை மின் தடை..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2023, 8:51 am

இராமநாதபுரம், ஆக.22 – இராமநாதபுரம் மாவட்டம்  கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (23.8.2023) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒரு வானேந்தல், தேவர்குறிச்சி, புனவாசல், சவேரியார்பட்டினம், மீனங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவிசெயற் பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (23.8.2023) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஏர்வாடி, தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மட்டியரேந்தல், இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் நாளை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் சி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!