திருவண்ணாமலை வட்டம் சடையனோடை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உலக மனிதநேய தினத்தை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா தலைமையில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், சாரணர் படை மற்றும் பசுமை படை மாணவர்கள் தி.மலையில் கிரேஸ் முதியோர் இல்லத்தை பார்வையிட்ட முதியோர்களுக்கு பல சேவைகள் செய்து பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி மகிழ்வித்தனர். மேலும் பள்ளியின் சார்பில் 65 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அங்கு நடந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் முதியோர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் எந்த சூழ்நிலையிலும் தம் பெற்றோர்களையும் தன் வீட்டில் உள்ள மூத்தோர்களையும் நாம் கைவிடுதல் கூடாது என்ற மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார். நிகழ்வின் போது கிரேஸ் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர்கள் முதியோர்கள் மாணவர்கள் உடன் இருந்தனர்.
சடையனோடை பள்ளி மாணவர்கள் மனிதநேய தின கொண்டாட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் August 20, 2023, 8:40 am




You must be logged in to post a comment.